Tuesday 16 February 2016

முன்னாள் மாணவர் சந்திப்பு - பிப்ரவரி 2016







 சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் 1993 முதல் 2002 வரையிலான 
காலகட்டத்தில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு 14.02.2016 அன்று நடந்தது . சந்திப்பில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட முன்னாள்மாணவ மாணவிகள் தங்களது கல்லூரி நாட்களை நினைவுக் கூர்ந்ததுடன்,சட்டக்கல்வி தங்களது வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியுள்ளது என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

  இக்கல்லூரியில் 1993 முதல் 2002 வரை சட்டம் பயின்றோரில் பலர்  நீதிபதிகளாகவும் மற்றும் காவல் துறையிலும் சமுதாயத்தின் இன்னபிற துறைகளிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இத்தகைய சூழலை ஏற்படுத்திக் கொடுத்த இக்கல்லூரிஒவ்வொரு வருடமும்  பல சட்ட நிபுணர்களையும் அறிஞர்களையும் உருவாக்கி தொண்டாற்றி வருகிறது  எனவும் முன்னாள் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
 வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும் எனவும்மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையான நதிநீர் இணைப்புப் பிரச்சினையை வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு குழுவாய் இணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் கல்லூரித் தலைவர் திரு.R.V.தனபாலன் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

  இவ்விழாவில் கல்லூரி செயலாளர் திரு.D.சரவணன், தலைமை நிர்வாக அதிகாரி திரு.A.மாணிக்கம், கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, கூடுதல் மாவட்ட நீதிபதி திரு.கார்த்திகேயன்,குற்றவியல் நடுவர் திரு.சுரேஷ்குமார், குற்றவியல் நடுவர் திரு.பாலகிருஷ்ணன், குற்றவியல் நடுவர் திரு.மணிவாசகம், குற்றவியல் நடுவர் திரு.ஞானசம்பந்தம்,தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் திரு.ஐயப்பமணி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் திரு.கதிரவன், கிராம நிர்வாக அதிகாரி திரு.கணேசன், அரசு உதவி வழக்கறிஞர் திருமதி.புனிதா, அரசு உதவி வழக்கறிஞர் திருமதி.மைதிலி,அரசு உதவி வழக்கறிஞர் திரு.கரிகாலன்,காவல்துறை ஆய்வாளர் திரு.விஜயகுமார், காவல்துறை ஆய்வாளர் திரு.செல்வகுமார்,இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் திருமதி.உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.